"தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம்?" - செல்வப்பெருந்தகை நச் பதில்
சென்னையை அடுத்த குன்றத்தூரில் காங்கிரஸ் வர்த்தக
பிரிவு சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்
பெருந்தகை, அக்கட்சி எம்பி விஜய் வசந்த்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனார். ஆட்டோக்கள்,
தையல் மிஷின்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை
பயனாளிகளுக்கு செல்வப்பெருந்தகை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்வப் பெருந்தகை, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்
இடம் பெறுவது குறித்து அகில இந்திய தலைமை முடிவு
செய்யும் என்று கூறினார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பாஜக
10 ஆண்டுகளாக துரோகம் செய்ததாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.