ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் போலீசாருடன் ம.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க நிர்வாகிகள் காத்திருந்த போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க நிர்வாகிகள், காவல்துறை உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.