ரயில்வே மேம்பாலப் பணி..அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-01-15 02:20 GMT

பொங்கல் பண்டிகை முடிந்தபின் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள இரட்டை ஏரியான தாரப்படவேடு ஏரி, கழிஞ்சூர் ஏரிகள் 28 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்படுகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், இரட்டை ஏரிகளின் பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்படும் என்று கூறினார். ஏரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், உரிய நேரத்தில் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்