காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்கு மகாத்மா காந்தி அடித்தளமிட்டதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி பல்வேறு கொள்கைகளை அறிவுறுத்தியதாகவும், அந்த கொள்கைகள் தான், நமது ஜனநாயகத்துக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, ஜனநாயகத்தில் மக்களே முதன்மையானவர்கள் என்பது தான் காங்கிரஸின் நோக்கம் எனக் கூறிய அவர், அதன்பேரில் மாநிலத்தில் ஆட்சி அமைந்தவுடன் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.