மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 50 சதவீதம் கமிஷன் பெறுவதாக ஒப்பந்ததாரர் ஞானேந்திர அவஸ்தி எழுதி இருந்த கடிதம் ஒன்றை பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இந்த கடிதம் போலியானது என பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கடிதம் எழுதியதாக கூறப்படும் ஞானேந்திர அவஸ்தி என்பவர் உண்மையிலே இருக்கிறாரா அல்லது அவரது ட்விட்டர் கணக்கு போலியானதா ? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.