தீர்ப்பு வந்த உடன் மோடி சொன்ன வார்த்தை... உடனே கொந்தளித்த காங்கிரஸ்

Update: 2024-04-27 10:02 GMT

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய இந்தியா கூட்டணி கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி எனவும் பிரதமர் மோடி கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராம் ரமேஷ், சில வாரங்களுக்கு முன்பு ஊழல் மிகுந்த தேர்தல் பத்திரத்தை சட்டவிரோதம் என அறிவித்து அரசியல் சாசனத்திற்கே எதிரானது எனக்கூறி பிரதமரையும் உச்சநீதிமன்றம் வலுவாக அறைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்த திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 8,200 கோடியை வசூலித்த பிரதமர் தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்