முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியில் - மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

Update: 2024-09-27 02:50 GMT

பிரதமரை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது தமிழக திட்டங்களுக்கான நிதி, தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்