இதுவே முதல்முறை... 45 ஆண்டு வரலாற்றை முறியடித்து புறப்பட்டார் பிரதமர் மோடி
இதுவே முதல்முறை... 45 ஆண்டு வரலாற்றை முறியடித்து புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து அரசு முறைப் பயணமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். தலைநகர் வார்சாவில், போலந்து அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்கும் மோடி, இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் போலந்து பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதனிடையே, போலந்தில் 2 நாள் பயணத்தை தொடர்ந்து, சுமார் 10 மணி நேரம் ரயிலில் பயணித்து 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.