"ஆட்சியை கவிழ்க்க மறைமுக சதி" - அரசியலில் பெரும் பரபரப்பு

Update: 2024-08-21 07:53 GMT

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன், முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதன் பிறகு நேற்று டெல்லிக்கு சம்பாய் சோரன் சென்றதால், பாஜகவில் இணைய உள்ளார் என கூறப்பட்டது. ஆனால், சொந்த ஊருக்கு திரும்பிய சம்பாய் சோரன், சொந்த காரணங்களுக்காக டெல்லி சென்றதாகவும், ஏற்கனவே அறிவித்தபடி புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் மீண்டும் தெரிவித்தார். சம்பாய் சோரனை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் ஆக்கியது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி என்பதால், அவர் துரோகம் செய்ய மாட்டார் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்