மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய திட்டங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை நாளை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்திக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
21-ந் தேதி முதல், 29ஆம் தேதி வரை, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்துடன் தொடங்கும் சட்டசபை, காலை 9.30 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் என இருவேளை நடைபெறுகிறது.
இந்த விவாதங்களில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.
29-ந்தேதி சனிக்கிழமை காலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார்.
பின்னர், சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும். கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைப்பார்.
இந்த கூட்டத் தொடரில், மகளிர் உரிமைத் தொகை புதிய பயனாளிகள் தேர்வு அறிவிப்பு, வறுமை ஒழிப்புக்கான தாயுமானவர் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு