பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியை கைப்பட வழங்கி நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி
சென்னையில் 28 ஆயிரத்து 848 பயனாளிகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை சார்பில் சென்னை சூரப்பட்டு பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி, வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதாக கூறினார்.