மேற்குவங்கம், பஞ்சாப், பிகார், என பல்வேறு மாநிலங்களில் இந்திய கூட்டணியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்திய கூட்டணி இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த மாநிலத்தில், காங்கிரஸ் உடனான கூட்டணியில் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பிலும் இதேபோக்கு தொடரும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 8 தொகுதிகளை மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கவும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 61 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் என அகிலேஷ்யாதவ் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர், அஜய் ராஜ் தெரிவித்துள்ளார். முகுல் வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை க் குழு முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், உத்தரபிரதேச மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.