கர்நாடகாவுக்கு எதிராக கொந்தளித்த ஐடி நிறுவனங்கள்.. டைமிங்கில் கிடா வெட்டிய நாயுடு மகன்

Update: 2024-07-18 09:50 GMT

கர்நாடகாவில் வேலைவாய்ப்பு மசோதாவுக்கு நாஸ்காம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆந்திரா தங்களை அன்புடன் வரவேற்பதாக அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் கன்னடர்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கும் வேலைவாய்ப்பு மசோதா குறித்த அறிவிப்புக்கு, மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காம் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதை சுட்டிக்காட்டி ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாஸ்காமை விசாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும்,தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர ஆந்திர அரசு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். விசாகப்பட்டினத்தில் உள்ள தங்களது ஐ.டி. சேவைகள், ஏ.ஐ மற்றும் டேட்டா சென்டர் கிளஸ்டருக்கு, தங்களது வணிகங்களை விரிவாக்கம் அல்லது இடமாற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளார். சிறந்த இட வசதி, தடையில்லா மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் திறமைவாய்ந்தவர்களை வழங்குவதாகவும் நாரா லோகேஷ் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்