கள்ளக்குறிச்சி விஷசாராயம் உயிரிழப்புக்கு காரணமாகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல
கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று காலை 10 மணியளில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் , முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
கலந்து கொள்வார்கள் என அதிமுக பொது செயலாளர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.