உலகமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில் மோடிக்கு போன் போட்ட நெதன்யாகு

Update: 2024-08-17 03:38 GMT

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்திற்கு நெதன்யாகு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இரு தலைவர்களும் மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது, போர் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்