மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், நலத்திட்டங்களுக்காக வழங்கப்படும் நிதியை உயர்த்திக் கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.