மொத்தமாக நிலைகுலைந்து போன இமாச்சல்...பிரதமர் மோடியின் அடுத்த பிளான் | PM Modi | India | Himachal
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கனமழை, வெள்ளத்தால் இமாச்சலபிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சேத மதிப்பு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இமாலச்சலபிரதேச மாநிலத்திற்கு விரைவில் வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவால் அந்த மாநிலத்தில் 75 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர்
பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.