ஒரு சிலரின் பதவி வெறி மற்றும் துரோகத்தினால் அதிமுக தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது வருங்கால அரசியலில் துரோகம் என்ற வார்த்தையைக் கண்டு அரசியல்வாதிகள்அஞ்சும் படி துரோகம் வீழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்... மேலும், சிஏஏ என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டமல்ல என்று தெரிவித்த அவர், இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற திமுக கூட்டணி கட்சிகள் அதை ஆயுதமாக கையில் எடுத்து வருவதாக குறிப்பிட்டார்..