மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் அம்மாபாளையம் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆயிரத்து 500 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர், உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதாகவும், தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து குடும்பத்தலைவிகளின் எண்ணிக்கையை குறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.