வரும் ஆகஸ்ட் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் குடியரசுத்தலைவர் திரவுபதி தலைமையிலான ஆளுநர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.இதில் அனைத்து அனைத்து மாநில ஆளுநர்கள், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில், புதிய குற்றவியல் சட்டம், உயர் கல்வியில் சீர்திருத்தம், எல்லைப்பகுதிகளின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.