பேராசிரியர் முனைவர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவரது மனைவி பார்வதியிடம் நூலுரிமைத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழ் வளர்ச்சித் துறையால் இதுவரை 173 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு 13 கோடியே 87 லட்ச ரூபாய் நூலுரிமைத் தொகையாக அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்தபடி, அவரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவரது மனைவி பார்வதியிடம் நூலுரிமைத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார். அப்போது, முனைவர் நன்னனின் மகள் அவ்வை கவிதை வாசித்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.