ர ாமநாதபுரம் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அக்கட்சி சென்னைஅண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவோடு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உரிய பணிகளை மேற்கொள்ளும் என்றார்.