ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பாடலுக்கு, தேர்தல் ஆணையம்தடை விதித்துள்ளதாக, டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பாடலை, இந்திய வரலாற்றில், தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது, இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். பாஜக தினந்தோறும் செய்யும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை என்றும், எங்களின் பிரச்சார பாடலில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மோசமாக காட்டுவதாக தேர்தல் ஆணையம் சொல்வதாக கூறியுள்ளார். அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்தவுடன் அமலாக்கத்துறை சிபிஐ மற்றும் பிற வழக்குகள் மூடப்பட்டால் தேர்தல் ஆணையம் ஆட்சேபனை கூறுவதில்லை என்றும், ஆனால் எங்கள் பிரச்சார பாடலில் இதனைக் குறிப்பிட்டால் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவிக்கிறது என தெரிவித்துள்ளார். சர்வாதிகாரம் பற்றி பேசினால், இது ஆளுங்கட்சி மீதான விமர்சனம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது என்று கூறியுள்ள அமைச்சர் அதிஷி, பாஜக சர்வாதிகார அரசு என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது என விமர்சித்துள்ளார்.