41-வது முறையாக...செந்தில் பாலாஜிக்கு ஷாக்... தேதி குறித்து நீதிமன்றம் அதிரடி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் செந்தில்பாலாஜி சென்னை முதனமை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீதிமன்ற காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதேபோல அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளி வைத்துள்ளார்.