பிரதமர் மோடியின் ஏகபோக மாடல்..! கடுமையாக தாக்கி ராகுல் காந்தி | Congress

Update: 2024-09-27 17:05 GMT

பிரதமர் மோடியின் ஏகபோக மாடல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சீரழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜம்மு - காஷ்மீர் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநிலத்தை சேர்ந்த வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உங்கள் கண்களில் தெரியும் விரத்தியும்

ஏமாற்றமும் நாடு முழுவதும் உள்ள சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் பெரும்பாலான சுயதொழில் முனைவோர் சந்தித்து வரக்கூடிய போராட்டங்களை பிரதிபலிப்பதாக கூறினார். பிரதமர் மோடியின் ஏகபோக மாடல், வேலைகளை பறித்து, சிறு, குறு, நடுத்தர சீரழித்து, மக்களை வஞ்சித்து விட்டதாக கூறினார். திறமையற்ற கொள்கை மூலம் இந்தியாவை உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தில் இருந்து நுகரும் பொருளாதாரமாக மாற்றி விட்டதாக விமர்சனம் செய்தார். இந்த விகிதத்தில் நாம் சீனாவுடன் போட்டியிடவோ அல்லது அனைத்து இந்தியர்களின் செழிப்பை உறுதிப்படுத்தவோ முடியாது என்றார். ஜிஎஸ்டியை எளிதாக்குவதோடு, பரந்த வாய்ப்பு மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்க, சிறு வணிகங்களுக்கு வங்கி முறையைத் திறக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்