காங்கிரசில் போட்டியா? - கமல் ஓபன் டாக்

Update: 2024-02-19 04:36 GMT

2 நாளில் கூட்டணி குறித்து பேசி விட்டு நல்ல செய்தியை சொல்கிறேன் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் 2 வார ப்யணத்தை முடித்து கொண்டு அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

முன் ஏற்பாடுக்காக அமெரிக்கா சென்று இருந்தேன். 2 நாளில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன். அமெரிக்காவில் இருந்து நான் எந்த செய்தியும் கொண்டுவரவில்லை இங்கு தான் செய்தியை உருவாக்க வேண்டும். நான் பேசி விட்டு சந்திக்கும் நல்ல வாய்ப்பு ஏற்படும். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நன்றாக நடந்து வருகிறது என்றார்.

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு 2 நாளில் நல்ல செய்தியை சொல்கிறேன். இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்

Tags:    

மேலும் செய்திகள்