சாகும் வரை உண்ணாவிரதம்? - திடீரென தொடங்கிய போராட்டம் - மதுரையில் பரபரப்பு
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க முயன்றனர். அப்போது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட அனுமதி இல்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.