ஜூலை 1ம் தேதி முதல்வர் கைக்கு வரும் முக்கிய ரிப்போர்ட்

Update: 2024-06-29 05:54 GMT

ஜூலை 1ம் தேதி மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவினர், தங்கள் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை கடந்த 2022ம் ஆண்டு அமைத்தது. இந்தக் குழு, பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, அறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்தப் பணி முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசின் தரப்பில் மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்