"காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளை கலைப்பதே பாஜகவின் நோக்கம்" - கே.எஸ்.அழகிரி பரபரப்பு கருத்து
வரும் 14 ஆம் தேதி, திமுக மகளிர் அணி நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். சென்னை வரும் சோனியா காந்திக்கு விமான நிலையத்திலிருந்து வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல, இங்கே திமுகவையும், அங்கே காங்கிரஸையும் துன்புறுத்த, அழிக்க, களைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை என புகார் கூறினார்.