ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் மெடல் வழங்கி கௌரவப்படுத்தினார். பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை வீட்டிற்கு அனுப்பியது போல் வரும் 2024 ஆண்டு ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப திமுகவினர் ஆயத்தமாக வேண்டும் என்று கூறினார். கடந்த 9 ஆண்டு
கால ஆட்சியில் பாஜக நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.