"நீட் மரணங்களுக்கு காரணம் பாஜகவா..?" - நாராயணன் திருப்பதி காட்டம்

Update: 2023-08-15 13:27 GMT

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை முதலமைச்சர் புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது என, பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வினால் ஏற்படும் மரணத்திற்கு பா.ஜ.க தான் என்று கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

நீட் தேர்வினால் தற்கொலை ஏற்படுகிறது என்பதால் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் முதலமைச்சர், தினந்தோறும் மதுவினால் ஏற்படும் கொலை, தற்கொலைக்காக, டாஸ்மாக் கடைகளை எப்போது அடைக்கப்போகிறார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்