அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2024-01-24 17:17 GMT

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே திமுகதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், கடந்த 2011-ஆம் ஆண்டு, திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்த அனுமதி அளித்து, அரசிதழில் வெளியிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டித்த நிலையில், மத்திய அரசின் தொடர் முயற்சியால் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர திமுகவுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பொள்ளாச்சியில், ராமர் கோயில் விழாவை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகியை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பிய பாஜக நிர்வாகிகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்