நிதிஷ்குமார் மட்டுமில்லை;பாஜகவுக்கு பறக்கும் காங்., MLAக்கள்..? "மாஸ்டர் பிளான்." பீகாரில் பரபரப்பு
எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள கட்சித்தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆர்.ஜே.டி. உடனான உறவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, சட்டசபையை கலைக்காமல் மீண்டும் முதலமைச்சராக நாளையே பொறுப்பேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை பாட்னாவில் நாளை கூட்டி, ஆளுநரை சந்தித்து புதிய அரசை அமைக்க உரிமை கோரவும் நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வராக பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது.