அண்ணாமலை யாத்திரையில் நடந்த சுவாரஸ்யம்...

Update: 2023-08-11 08:26 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டபோது, சிறுவர், சிறுமி இருவரும் சுருள்வாள், சிலம்பம் விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிவகாசியில் நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, காரனேஷன்காலனி, பராசக்தி காலனி, அண்ணா காலனி, காமராஜர் சிலை வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தார். அண்ணா காலனி விநாயகர் கோவிலில் அண்ணாமலைக்கு பரிவாரம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் சிலை முன்பாக சிலம்பம் வீசி திறமையை வெளிப்படுத்திய சிறுவன், சிறுமியை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அவரிடம் சிவகாசியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்