அண்ணாமலை கையில் பெண் கொடுத்த மனு - நடுரோட்டில் கிடந்ததால் அதிர்ச்சி

Update: 2023-08-05 03:38 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், குறைகளை தீர்க்க வலியுறுத்தி வழங்கப்பட்ட மனு, சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் நாள் பயணத்தை தொடர்ந்த அண்ணாமலையுடன் ஏராளமான பாஜக தொண்டர்கள் பயணித்தனர். இந்நிலையில், தாய்வீடு மகளிர் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், மகளிர் குழுக்களின் பிரச்சனைகள் குறித்தும், தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை ரத்து செய்யக்கோரியும் அவரிடம் மனு அளித்தார். அந்த மனு பெரிய கடைவீதி சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்