அண்ணாமலை வேட்புமனுவில் மீண்டும் சர்ச்சை? புது புயலை கிளப்பிய அதிகாரிகள்
அண்ணாமலை வேட்புமனுவில் மீண்டும் சர்ச்சை? புது புயலை கிளப்பிய அதிகாரிகள்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது வேட்புமனுக்களின் தொடர் எண்களை மாற்றிச் சொல்வதால், அவருடைய வேட்புமனு தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்புமனுக்களில் குளறுபடி இருப்பதாக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இதனால் வட்புமனு பரிசீலனையின்போது அரங்கத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, வேட்புமனுவை பதிவேற்றம் செய்வதில் தவறு நேர்ந்ததால் குழப்பம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, அண்ணாமலை சார்பில் தொடர் வரிசை எண் 17 மற்றும் 27 ஆகிய இரு எண்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக கூறிய அதிகாரிகள், 27-ஆம் எண் கொண்ட வேட்புமனுவுக்குப் பதிலாக 17-ஆம் எண் வேட்புமனுவை பதிவேற்றம் செய்து விட்டதால் குழப்பம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தனர். ஆனால், நேற்றிரவு செய்தியாள்ரகளுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, 15 மற்றும் 27 ஆகிய தொடர் எண்களில் தனது வேட்புமனு இருந்ததாக கூறியதால், மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.