திருப்பத்தூர் மண்ணில் உறுதியாக சொன்ன அண்ணாமலை

Update: 2024-02-01 03:58 GMT

பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் எனவும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' மேற்கொண்டார். அவருக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிறைவாக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் நாடு அமைதியாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்