கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் கேரட் தோட்டத்தில் இறங்கி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். தோட்டத்தில் கேரட் அறுவடை பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் கேபி.முனுசாமி மற்றும் வேட்பாளர் ஜெயபிரகாஷ் வாக்கு சேகரித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர , கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை சேர்க்கும் எல்லைப்பகுதி என்பதால் கன்னடம், தெலுங்கு, தமிழ் , உருது ஆகிய மொழிகளில் வாக்கு சேகரித்தார்..