தேர்தல் நெருங்க உள்ள நிலையில் மத்திய அரசின் தோல்விகளையும், சாமானிய மக்களை பாதிக்கும் காரணிகளையும், முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர்,சட்டமன்றம் மற்றும் பொதுத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ஒருங்கிணைப்புடன் செயல்படுவது அவசியம் என்று கூறினார்.நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வி ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகள் மற்றும் கடந்த காங்கிரஸ் அரசுகளின் முன்மாதிரியான திட்டங்களை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இந்த சாதனைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம், பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைத்து, பிரகாசமான எதிர்காலத்தை ஊக்குவிக்க முடியும் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.