அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு பிறகு பேசிய நுகர்வோர் விவகார அமைச்சர் ராவ் சாஹிப் பட்டீல் தண்வி, இந்த மசோதா மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும் நுகர்வோரும் லாபம் அடைவார்கள் எனவும் தெரிவித்தார்,. இந்த நிலையில் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதாவுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்,. மேலும் அந்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர போவதாகவும் அவர் கூறியுள்ளார்,.