அமைச்சருக்கு நெருங்கிய தொண்டர் கொலை - சிசிடிவி காட்சிகளை கொண்டு 4 பேரை தேடும் பணி தீவிரம்

ஆந்திராவில் அமைச்சருக்கு நெருங்கிய தொண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2020-06-30 14:36 GMT
ஆந்திராவில் அமைச்சருக்கு நெருங்கிய தொண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் அம்மாநில  செய்தி தொடர்பு அமைச்சரின் நெருங்கிய தொண்டர்  என்று கூறப்படுகிறது. இந்நிலையில்  பாஷ்கர் ராவை  4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த பாஸ்கர் ராவ், உயிரிழந்தார். இது குறித்து சிசிடிவி கேமராவில் பதிவானதை காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்