பேருந்து மூலம் உ.பி. எல்லை வந்தடைந்த தொழிலாளர்கள் - பேருந்துகளுக்கு அனுமதி வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் சிக்கியிருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த 135-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் உத்தரபிரதேச எல்லையான பஹாஜ் பகுதியை வந்தடைந்தனர்.

Update: 2020-05-18 04:25 GMT
ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் சிக்கியிருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த 135-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் உத்தரபிரதேச எல்லையான பஹாஜ் பகுதியை வந்தடைந்தனர். இந்நிலையில், மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளுக்கு, அனுமதி வழங்க கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இது அரசியலுக்கான நேரம் இல்லை என்று தெரிவித்துள்ள பிரியங்கா, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்