மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி - பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கியது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கியது. அவை துவங்கிய சில நிமிடங்களில், கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.ஆனால் கோரிக்கையை அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.