"வாக்கு இயந்திரங்களில் குளறுபடி செய்ய முயற்சி" - வீடியோ வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு டெல்லியில் வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்துதற்கான முயற்சி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-02-09 15:55 GMT
கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு டெல்லியில் வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்துதற்கான முயற்சி நடப்பதாக, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், டெல்லியில் ஆம் ஆத்மி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், வாக்கு இயந்திரங்களை போலீஸ் உதவியுடன், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுவதாகக் சஞ்சய்சிங் டிவிட்டரில் வீடியா வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் வாக்கு இயந்திரங்களில் குளறுபடி செய்து பாஜக ஆட்சிக்கு வந்ததது போன்று, டெல்லியிலும் முயற்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்