"அனைத்து மதங்களும் மகத்தானவை" - வெங்கையா நாயுடு
அனைத்து மதங்களும் மகத்தானவை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
அனைத்து மதங்களும் மகத்தானவை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ராமகிருஷ்ண விஜயம் இதழின் நூறாவது ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பலவேறு நாடுகளில் பாதிப்பு உள்ளாகும் சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் ஆனால் அதனை சிலர் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார். மேலும், இந்தியாவில் பழங்காலந்தொட்டே மதச்சார்பின்மை இருந்து வருவதாக கூறிய அவர், அனைத்து மதங்களும் முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தார்.