"திருவள்ளுவர், அனைவருக்கும் பொதுவானவர்" - கமல்ஹாசன்
"திருவள்ளுவர், யாருக்கும் சொந்தம் கிடையாது"
திருவள்ளுவர், அனைவருக்கு் பொதுவானவர் என அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வர்ணம் பூச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். பரமக்குடியில் தனது தந்தை சீனிவாசனின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், நடிப்பு தனது தொழில் - அரசியல் தனது கடமை என்றார். வள்ளுவரை சொந்தம் கொண்டாட, பலரும் முயலுவதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார்.