பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பருப்பு கொள்முதலில் முறைகேடு செய்ததால் அரசுக்கு, 730 கோடி ரூபாய் இழப்பு என 2014 ஆம் ஆண்டு ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து, ராமதாஸ்க்கு எதிராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். அமைச்சரை குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை என ராமதாஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.