தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா விவகாரம்: மாநிலங்களவையில் நிறைவேறாமல் தடுக்க சோனியா திட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் முறியடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் முறியடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார். சோனியா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதா, மாநிலங்களவைக்கு வர உள்ள நிலையில், அங்கு, நிறைவேறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கட்சி எம்.பி.களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். திருத்த மசோதாவுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நோட்டீஸுக்கு 14 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர் கட்சிகள் துணையுடன் தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்க சோனியா அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடடத்தக்கது.