திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை: சலுகைகள் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2019-02-22 17:44 GMT
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவின் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. குழுவின் தலைவரான டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, டி.கே எஸ் இளங்கோவன் , திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, வரும் 28ஆம் தேதி ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை சமர்ப்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய கடன்,  கல்வி கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்படும் என தெரிகிறது. நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்