அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதி ? - அடுத்தவாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அ.தி.மு.க- பா.ஜ.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததை தொடர்ந்து, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க இடையிலான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அடுத்தவாரம் நடைபெறும் கூட்டத்தில், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பை வெளியிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை மீண்டும் சென்னை வரவுள்ளதாகவும், அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து இறுதிசெய்யப்படும் என தெரிகிறது